ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

முதல் ஒரு நாள் போட்டி: நியூசிலாந்து 190  ரன்களில்  ஆட்டமிழந்தது!

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மாசாலாவில் இன்று நடைபெற்று வரும்  முதல் ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து அணி  43.5 ஓவர்களில்... 

News image
Updated On :16 அக்டோபர் 2016, 11:20 am

DIN

தரம்சலா: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மாசாலாவில் இன்று நடைபெற்று வரும்  முதல் ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து அணி  43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 190 ரன்கள் எடுத்தது.

டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தொடங்கியது. இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டிருந்தார். மந்தீப் சிங்,. ஜெயந்த் யாதவ், தவல் குல்கர்னி ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

ஆரம்பம் முதலே இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் மற்றும் பாண்ட்யா ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து திணறியது. பொறி பறந்த பந்துவீச்சின் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன. ஒரு கட்டத்தில் 50 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து 5 விக்கெட்களை இழந்திருந்தது .

நியூசிலாந்து அணியில் 3 பேர் டக் அவுட் ஆனார்கள். டாம் லாதம்தான் சற்று கவுரவத்தைக் காக்கும் வகையில் ஆடினார். தனி ஒருவனாக அவர் போராடி நிறுத்தி நிதானமாக ஆடியதால்தான் நியூசிலாந்தால் 100 ரன்களைத் நியூசிலாந்தால்  தாண்ட முடிந்தது.

40 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 166 ரன்களை எடுத்திருந்தது. மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இறுதிவரை போராடிய டாம் லோதம் மட்டும்  ஆட்டமிழக்காமல் 98 பந்துகளில் 79 ரன்களை எடுக்க, நியூஸிலாந்து அணி 43.5 ஓவர்களில் 190 ரங்களுக்கு ஆட்டம் இழந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.