கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன்மூலம் நியூசிலாந்துக்கு 434 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரின் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 262 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 75 ரன்னும், டாம் லாதம் 58 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா 5 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
முதல் இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, நேற்றைய 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து இருந்தது. முரளி விஜய் 64 ரன்னும், புஜாரா 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. 2-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் - புஜாரா ஜோடி 133 ரன் எடுத்தனர். முரளி விஜய் 76 ரன் எடுத்து இருந்த போது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 185 ஆக இருந்தது.அதன் பின்னர் நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்த கோஹ்லி- புஜாரா ஜோடியும் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய ஜடேஜா-ரோகித் சர்மா ஜோடியில் ரோகித் சர்மா 68 ரன்கள்; ஜடேஜா 50 ரன்கள் எடுத்திருந்தனர்.
5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற நியூசிலாந்துக்கு 434 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்சிடிஇ நுழைவுத் தோ்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு

பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஆடியோ வசதியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு வசதி: மனுவை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம்

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்களிப்புடன் ஒரே நாளில் இரண்டு உலக சாதனை ஓவியங்கள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


