ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை நெருங்கியுள்ளது.
கான்பூர் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் தரவரிசைப் பட்டியலில் 110 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளது இந்திய அணி. இந்நிலையில், நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது.
இதில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் பாகிஸ்தானை (111 புள்ளிகள்) பின்னுக்குத்தள்ளி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடிக்கும்.
இதனிடையே, கான்பூர் டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
கொல்கத்தா டெஸ்டில் அஸ்வின் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயினை பின்னுக்குத்தள்ளி அவர் முதலிடம் பிடிப்பார்.
பேட்ஸ்மேன்கள் பட்டியலில், லோகேஷ் ராகுல் 5 இடங்கள் முன்னேறி 57-ஆவது இடத்துக்கும், ரோஹித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 52-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.