மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஐபிஎல்: ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆரம்ப ஆட்டங்களில் இருந்து விலகல்!

கோலி, ராகுல், அஸ்வின், விஜய் என காயத்தால் அவதிப்படும் வீரர்களுடன்...

News image
Updated On :1 ஏப்ரல் 2017, 6:22 am

இந்த ஐபிஎல் போட்டியில் பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாகப் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோலி, ராகுல், அஸ்வின், விஜய் என காயத்தால் அவதிப்படும் வீரர்களுடன் தற்போது ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் இணைந்துள்ளார்கள்.

காயம் காரணமாக ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் ஐபிஎல் போட்டிகளின் ஆரம்ப ஆட்டங்களில் விளையாடமாட்டார்கள். இருவரும் அவரவர் அணிகளின் முதலிரண்டு ஆட்டங்களில் விளையாடாமல், மூன்றாவது ஆட்டத்திலிருந்து ஐபிஎல் போட்டியில் விளையாடுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோலி பெங்களூர் அணியுடன் நாளை இணைகிறார். அவருடைய உடற்தகுதி குறித்து பிசிசிஐ மருத்துவர் மற்றும் முடநீக்கியல் நிபுணர் ஆகியோர் ஆய்வு செய்வார்கள். அதன்பிறகே கோலியின் காயம் குறித்து முழுவிவரம் தெரியவரும். 

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதற்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவிருப்பதால் அவர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் இப்போது ராகுலும் விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

 24 வயதான ராகுலுக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டபோதும், ஆஸ்திரேலியத் தொடரில் வலியோடே விளையாடி முடித்தார். அந்தத் தொடரில் ராகுல் 393 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் முரளி விஜய் மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்புள்ளது. அதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகலாம் என தெரிகிறது. விஜயின் மருத்துவ அறிக்கைக்காக பஞ்சாப் அணி காத்திருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் வீரர் அஸ்வின் விலகியுள்ளார்.

 அவர், "ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா' (அடிவயிற்றுப் பகுதியில் லேசான தசை கிழிவு) பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்து குணமடைய 6 முதல் 8 வாரங்கள் வரை ஓய்வு அவசியமாகும். அதனால் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியிருக்கிறார். அவர், சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்னதாக பூரண குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடியதன் காரணமாக அவர் இப்போது காயத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.