மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் ஃபெடரர் 7-6 (11/9), 6-7 (9/11), 7-6 (7/5) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸைக் கடும் போராட்டத்துக்குப் பிறகு தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இந்த சீசனில் இதுவரை 19 ஆட்டங்களில் விளையாடி, அதில் 18-ல் வெற்றி கண்டுள்ளார்.
இதேபோல அரையிறுதியில் நடால் 6-1, 7-5 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றில் ஃபெடரருடன் மோதவுள்ளார். நடாலும், ஃபாக்னினியும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் நடால் 8 முறையும், ஃபாக்னினி 3 முறையும் வெற்றி கண்டுள்ளனர்.
மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் 5-ஆவது முறையாக பங்கேற்றுள்ள நடால், இதுவரை ஒரு முறைகூட இங்கு பட்டம் வென்றதில்லை. அந்த குறையை இந்த முறை தீர்ப்பதில் தீவிரமாக இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!

உ.பி.: நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த ரூ.4 லட்ச பணம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சர்தார் - 2 என்ன ஆனது?
வேட்டுவம் வெளியீடு எப்போது?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


