மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஐபிஎல்: முரளி விஜய் விலகல்! பஞ்சாப் அணியில் இஷாந்த்!

முரளி விஜய் இந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஏப்ரல் 2017, 10:31 am

DIN

வேறெந்த ஐபிஎல்-லிலும் இதுபோல ஏற்பட்டதில்லை. முன்னணி இந்திய வீரர்கள் வீரர்கள் உள்பட பலர் இந்த வருட ஐபிஎல்-லில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்கள். 

அஸ்வின், ராகுல், விஜய் என மூன்று முக்கிய இந்திய வீரர்கள் ஐபிஎல்-லில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்கள். வெளிநாட்டு வீரர்களில் டி காக், டுமினி, ஸ்டார்க், மிட்செல் மார்ஷ், பீட்டர்சன் ஆகிய வீரர்கள் காயம் மற்றும் பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த வருட ஐபிஎல்-லில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்கள். காயம் காரணமாக கோலி, டிவில்லியர்ஸ், ஜடேஜா, உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளின் ஆரம்ப ஆட்டங்களில் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள். பட்டியலில் நாளுக்கு நாள் புதுப்புது வீரர்கள் சேர்கிறார்கள். 

இப்போது முரளி விஜய் இந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் முரளி விஜய் மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பஞ்சாப் அணியில் இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.