பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஐ.பி.எல்லில் இன்று  'இரட்டை அதிரடி'

ஐ.பி.எல் பத்தாவது சீசன் போட்டிகளில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

News image
Updated On :9 ஏப்ரல் 2017, 9:25 am

DIN

ஐதராபாத்: ஐ.பி.எல் பத்தாவது சீசன் போட்டிகளில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல் பத்தாவது சீசன் போட்டிகளில் ஐதராபாத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான ஐதராபாத் அணி இந்த சீசனில் தனது தொடக்க ஆட்டத்தில் 35 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி இருந்தது. அதே சமயத்தில் குஜராத் அணி தன்னுடைய தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்றது.தற்பொழுது சொந்த மண்ணில் விளையாடுவதால் ஐதராபாத் அணி கூடுதல் பலத்துடன் குஜராத்தை எதிர்கொள்கிறது. எனவே குஜராத் அணி முதல் வெற்றியை பெற கடுமையாக போராட வேண்டும். இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இந்த மூன்று ஆட்டத்திலும் ஐதராபாத் அணியே வெற்றி பெற்றுள்ளது.  

இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.

மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் புனே அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அதே சமயம் கொல்கத்தா அணி குஜராத்துக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில்  83 ரன் என்ற பெரிய இலக்கை விக்கெட் இழப்பின்றி எடுத்து அபார வெற்றி பெற்றது. இத காரணமாக அந்த அணி 2-வது வெற்றியை ருசிக்கும் ஆர்வத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.