
26-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கிப் போட்டி மலேசியாவின் இப்போ நகரில் இன்று தொடங்கியது.
முதல் ஆட்டத்தில் இந்தியா-பிரிட்டன் அணிகள் மோதின. இதில் 2-2 என்கிற கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.
பிரிட்டனைத் தொடர்ந்து, 30-ஆம் தேதி நியூஸிலாந்துடனும், மே 2-ஆம் தேதி ஆஸ்திரேலியா, 3-ஆம் தேதி ஜப்பான், 5-ஆம் தேதி மலேசியா அணிகளுடன் மோதுகிறது இந்திய அணி.
கடந்த சீசனில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய இந்தியா, 9 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் அதில் தோல்வி கண்டது. எனவே, இம்முறை கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா மீண்டும் களம் காண்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.