இந்திய அணி 400 ரன்கள்!
இந்திய அணி 106 ஓவர்களில் 400 ரன்களை எட்டியது. ரஹானே 126, அஸ்வின் 28 ரன்களுடன்...


கொழும்பில் நேற்று தொடங்கிய இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. சேதேஷ்வர் புஜாரா 225 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 128, அஜிங்க்ய ரஹானே 168 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்கள். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 211 ரன்கள் குவித்தது.
இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியவுடன் 133 ரன்களில் கருணாரத்னே பந்துவீச்சில் வெளியேறினார் புஜாரா. 4-வது விக்கெட்டுக்கு புஜாரா - ரஹானே ஜோடி 217 ரன்கள் குவித்தது. இதன்பிறகு அஸ்வின் களமிறங்கி வழக்கம்போல தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி 106 ஓவர்களில் 400 ரன்களை எட்டியது. ரஹானே 126, அஸ்வின் 28 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...