இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பிரபல ஆஷஸ் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. இதில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியே அதே ஆஸ்திரேலிய அணியில் மாற்றமில்லாமல் இம்முறையும் களமிறங்கவுள்ளது.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:
டேவிட் வார்னர், கேமரூன் பேன்கிராஃப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஷான் மார்ஷ், டிம் பெய்ன் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜாஷ் ஹாசில்வுட், நாதன் லயன்.
இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:
முதல் டெஸ்ட் போன்று இதிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெற விரும்புகிறோம். இந்த ஆடுகளம் பழையது போன்றும் அல்லாமல் கடந்த 2 வருடங்களில் விளையாடிய புதிய வடிவிலும் இல்லை. இந்த இரண்டுக்கும் மத்தியில் உள்ள தன்மையைக் கொண்டதாக உள்ளது. இங்கு பந்து ஸ்விங் ஆவது சற்று கடினம்தான். இருப்பினும் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என நம்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


