மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மொஹலி ஒருநாள் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ள தோனி என்கிற மோப்ப நாய்!

மொஹலி காவல்துறையில் பாதுகாப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் தோனி என்கிற மோப்ப நாய்...

News image
Updated On :6 டிசம்பர் 2017, 9:22 am

எழில்

மொஹலி காவல்துறையில் பாதுகாப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் தோனி என்கிற மோப்ப நாய் டிசம்பர் 13 அன்று மொஹலியில் நடைபெறுகிற இந்தியா - இலங்கை இடையிலான ஒருநாள் போட்டியுடன் பணியிலிருந்து ஓய்வுபெறுகிறது. 

மொஹலி மாவட்டக் காவல்துறையில் கடந்த 10 வருடங்களாகப் பணியாற்றி வரும் இந்த நாயுடன் இணைந்து ஜான், ப்ரீத்தி என்கிற இதர இரு மோப்ப நாய்களும் அதே நாளில் ஓய்வு பெறவுள்ளன. 

ஓய்வுக்குப் பிறகு லேப்ரடார் இனத்தைச் சேர்ந்த இந்த தோனி நாய், ஏலத்தில் விடப்படும். இதன் அடிப்படைத் தொகை ரூ. 800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

2007-ல் காவல்துறையில் பணியாற்றத் தொடங்கிய தோனி நாய், பல வழக்குகளில் முக்கியப் பங்காற்றியுள்ளது. அதேபோல மொஹலி கிரிக்கெட் மைதானத்தின் பாதுகாப்புச் சோதனைகளுக்கும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. 2011 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியபோது இரு நாட்டுப் பிரதமர்களும் நேரில் வந்து அப்போட்டியில் கலந்துகொண்டார்கள். அப்போதும் இந்த நாய் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது. 

தோனி நாய்க்கு மூன்று மாதங்களாக இருந்தபோது மொஹலி காவல் துறையில் இணைந்துள்ளது. பிலாலுர் பயிற்சியகத்தில் பயிற்சி பெற்றது. 

தினமும் 3 லிட்டர் பால், 20 முதல் 30 முட்டைகள் வரை சாப்பிடும் தோனி நாய், கிரிக்கெட் போட்டி நடைபெறும் சமயத்தில் ஓய்வு பெறவுள்ளதால் அதற்கு அதிகக் கவனம் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.