சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!
/

இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான்! பிசிசிஐ புதிய அறிவிப்பு!

கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது... 

News image
Updated On :11 டிசம்பர் 2017, 11:04 am

எழில்

ஆப்கானிஸ்தான் அணி தன்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை எதிர்கொள்கிறது. இத்தகவலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதையடுத்து தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான். 

2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியை ஆப்கானிஸ்தான் விளையாடவிருந்தது. ஆனால் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே வரலாற்று ரீதியிலான உறவு உள்ளதால் ஆப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்தியா முடிவெடுத்துள்ளது. எங்கு, எப்போது டெஸ்ட் போட்டி நடைபெறும் என்கிற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.