மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோனிக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம்: யார் ஜெயித்தார்கள் தெரியுமா?

மொகாலி ஒருநாள் போட்டிக்கான பயிற்சியின் பொழுது தோனிக்கும், ஹர்திக் பாண்ட்யாவும் இடையே நடைபெற்ற சுவாரஸ்ய ஓட்டப்பந்தயம் குறித்த விடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2017, 9:53 am

DIN

மொகாலி: மொகாலி ஒருநாள் போட்டிக்கான பயிற்சியின் பொழுது தோனிக்கும், ஹர்திக் பாண்ட்யாவுக்கும் இடையே நடைபெற்ற சுவாரஸ்ய ஓட்டப்பந்தயம் குறித்த விடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் புதன்கிழமை நடந்து வருகிறது.

இந்த போட்டிக்காக செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற வலைப்பயிற்சியின் பொழுது இந்திய அணி. விக்கெட் கீப்பரான தோனிக்கும், அணியின் இளைய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் இடையே விளையாட்டாக ஒரு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது.

மெதுவாக ஆரம்பித்து பின்னர் இருவரும் இலக்கு நோக்கி விரையும் அந்த விடியோவில், இறுதியில் தோனி வெற்றி பெறுகிறார்.

சமீப காலங்களில் தோனியின் உடற்திறன், விளையாடும் தகுதி குறித்தெல்லாம் விமர்சகர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக இந்த விடியோ அமைந்துள்ளது எனலாம். முக்கியமாக தோனி இளைஞரான பாண்ட்யாவை விட 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.