ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

முன்கூட்டியே நடக்கவுள்ள டி20 போட்டிகள்: ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு பிசிசிஐ புதிய ஏற்பாடு!

சையத் முஸ்டாக் அலி டி20 போட்டி, பிப்ரவரி 4 முதல் 10 வரை நடைபெறுவதாக இருந்தது... 

News image
Updated On :21 டிசம்பர் 2017, 12:21 pm

எழில்

2018-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் ஜனவரி 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி உள்ளூர் டி20 போட்டிகளை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

ஜனவரி 21 முதல் 29 வரை நடைபெறுவதாக இருந்த மண்டலங்களுக்கு இடையிலான டி20 போட்டி தற்போது ஜனவரி 8 முதல் 16 வரை நடைபெறவிருக்கிறது. 

அதேபோல சையத் முஸ்டாக் அலி டி20 போட்டி, பிப்ரவரி 4 முதல் 10 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தப் போட்டி ஜனவரி 21 முதல் 27 வரை நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

பிசிசிஐயின் இந்த அறிவிப்பு இந்தியாவில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த இரு போட்டிகள் மூலம் புதிய திறமைகளை அறிந்துகொள்ள ஐபிஎல் அணிகளுக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம் உருவாகும். இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர்களை ஏலத்தில் தேர்வு செய்யவும் உதவியாக இருக்கும். மேலும், இரு டி20 போட்டிகளுக்கும் அதிகக் கவனம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.