சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தரவரிசையில் முதலிடம் பெற விரும்புகிறேன்

எதிர்வரும் சீசனில் உலகின் முதல்நிலை வீராங்கனையாக உருவெடுக்க விரும்புவதாக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறினார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:39 pm

DIN

எதிர்வரும் சீசனில் உலகின் முதல்நிலை வீராங்கனையாக உருவெடுக்க விரும்புவதாக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறினார்.
இந்த சீசனில் அதிகபட்சமாக 2-ஆவது இடத்துக்கு முன்னேறிய சிந்து, செய்யது மோடி, இந்தியா ஓபன், கொரிய ஓபன் ஆகியவற்றில் பட்டம் வென்றதுடன், உலக சாம்பியன்ஷிப், ஹாங்காங் ஓபன், துபை சூப்பர் சீரிஸ் ஆகியவற்றில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தார்.
இந்நிலையில் சிந்து தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
2018-ஆம் ஆண்டு சீசனில் உலகின் முதல்நிலை வீராங்கனையாக முன்னேற விரும்புகிறேன். தற்போது 3-ஆவது இடத்தில் இருக்கும் நான் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் முதலிடம் பெறுவேன். எனவே, ரேங்கிங்கில் முன்னேறுவதற்காக எனக்கு நெருக்கடி ஏற்படுத்திக் கொள்ளப்போவதில்லை. தற்போது மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நீடிக்கும் நேரம் அதிகரித்துள்ளது. வீராங்கனைகள் சவால் அளிப்பவர்களாக இருப்பதாலேயே ஆட்டநேரம் நீடிக்கிறது. இனி, குறைந்த நேரம் கொண்ட ஆட்டங்கள் இருக்காது எனக் கருதுகிறேன்.
போட்டிகளின்போது ரசிகர்களின் உற்சாக ஊக்குவிப்பு எந்தவித நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அது உத்வேகம் அளிக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நான் எனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதையே நோக்கமாக கொண்டிருக்கிறேன்.
போட்டிகளைப் பொருத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் சில போட்டிகளின் அட்டவணை மாறலாம். போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். அதை நாம் குறைகூற இயலாது. என்னைப் பொருத்த வரையில் அதனால் ஆட்டத்தில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று சிந்து கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.