2018-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
இதற்கான மல்யுத்த விளையாட்டு தகுதிச் சுற்றுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் பிரிவில் டிசம்பர் 29-ந் தேதி நடைபெற்ற 74 கிலோ எடைப் பிரிவு தகுதிச் சுற்றுப்போட்டியில் ஜிதேந்தர் குமாரை வீழ்த்தி சுஷில் குமார் தகுதி பெற்றார்.
இந்நிலையில், மகளிர் பிரிவில் நடைபெற்ற 62 கிலோ எடைப் பிரிவில் நட்சத்திர வீராங்கனை சாக்ஷி மாலிக், டிசம்பர் 30-ந் தேதி தகுதி பெற்றார். இவர், ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார்.
மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த பிரிவில் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.
அதுமட்டுமல்லாமல், 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத், 57 கிலோ எடைப் பிரிவில் பூஜா தண்டா, 54 கிலோ எடைப் பிரிவில் பபிதா குமாரி, 68 கிலோ எடைப் பிரிவில் திவ்யா கரண், 76 கிலோ எடைப் பிரிவில் கிரண் ஆகியோரும் 2018 காமன்வெல்த் மல்யுத்தப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


