நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஹைதராபாத் டெஸ்ட்: வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 322/6 

ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று சாகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீமின் நிதான ஆட்டத்தால் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2017, 12:22 pm

DIN

ஹைதராபாத்: ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று சாகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீமின் நிதான ஆட்டத்தால் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்துள்ளது.

ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன் வங்கதேச அணி தனது ஆட்டத்தை துவக்கியது. வங்கதேச அணியில் தமிம் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மாமினுல் ஹக் (12), மகமதுல்லா (28) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற அந்த அணி 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. உணவு இடைவேளையின் பொழுது வங்கதேசம் நான்கு விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்கு பிறகு சிறப்பாக விளையாடி வந்த  சாகிப் அல் ஹசன் 69 பந்துகளில் அரைசதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து முஷபிகுர் ரஹீமும் 133 பந்துகளில் தன்னுடைய அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

82 ரன்கள் எடுத்த நிலையில் சாகிப் அல் ஹசன் அஸ்வின் பந்துவீச்சில் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் 14 பவுண்டரிகள் அடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து இறங்கிய சபிர் ரஹ்மானும் விரைவில் வெளியேறினார். பின்னர் விளையாட வந்த மெஹ்தி ஹசன் மிராஸ் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 

இறுதியில் வங்கதேச அணி 104 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முஷபிகுர் 81 ரன்னுடனும், மெஹ்தி 51 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் சர்மா, அஸ்வின், ஜடேஜா ஆகிய மூவரும் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.