இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் 10-ஆவது ஆண்டு போட்டிகள் ஏப்ரல் 5-ஆம் தேதி ஹைதராபாதில் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கடந்த சீசனில் 2-ஆவதாக வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இறுதி ஆட்டமும், ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
10-ஆவது ஐபிஎல் போட்டிகள் சுமார் 47 நாள்களாக பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. அட்டவணையிட்டபடி, ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாடும். இதில் 7 ஆட்டங்கள், அந்தந்த அணி சார்ந்த மாநிலத்தின் சொந்த மைதானத்தில் நடைபெறும். கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக இந்த சீசனில் இந்தூர் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதனிடையே, இதர ஆட்டங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் புணேவில் நடைபெறுகிறது. ஏப்ரல் 7-ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ராஜ்கோட் மைதானத்தில் குஜராத் லையன்ஸ் அணி சந்திக்கிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஏப்ரல் 8-ஆம் தேதி பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. அதேநாளில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இந்தூரில் ரைசிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்டுள்ள ஐபிஎல் போட்டி அட்டவணையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு ஒரு போட்டியும் ஒதுக்கப்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸின் தடைக்காலம் இந்த ஐபிஎல்-லுடன் முடிவடைவதால் அடுத்த வருடம் சென்னை சேப்பாக்கத்தில் நிச்சயம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நோய்நாடி நோய்முதல் நாடி...

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


