வாழ்நாள் தடையை விலக்கக் கோரி ஸ்ரீசாந்த் கடிதம்!

தன்னை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அனுமதியளிக்கவேண்டும். தனக்கு நியாயம் கிடைக்கவேண்டும்... 
வாழ்நாள் தடையை விலக்கக் கோரி ஸ்ரீசாந்த் கடிதம்!
Updated on
1 min read

2013 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். ஸ்ரீசாந்த், சவாண் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த தில்லி நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று இவர்கள் 3 பேர் உள்பட 36 பேரை விடுவித்தது. ஆனால், ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட வீரர்களின் (ஸ்ரீசாந்த், அங்கித் சவாண் உள்ளிட்டோர்) ஆயுள்காலத் தடை தொடரும் என்று பிசிசிஐ அறிவித்தது. 

குற்ற நடவடிக்கை, ஒழுங்கு நடவடிக்கை இரண்டும் வெவ்வேறானவை. சம்பந்தப்பட்ட வீரர்களின் ஒழுங்கீனச் செயல்கள் குறித்து ஊழல் தடுப்புக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆயுள்காலத் தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று பிசிசிஐ விளக்கம் அளித்தது. 

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகிப்பதற்கு முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது உச்ச நீதிமன்றம். ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு பிசிசிஐக்கு முறைப்படி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை வினோத் ராய் தலைமையிலான குழுவே பிசிசிஐயை நிர்வகிக்கும்.

இந்நிலையில், வினோத் ராய்க்கு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், நீதிமன்றத்தால் தன்னுடைய தடை நீக்கப்பட்டபிறகும் பிசிசிஐ தடையை நீக்க மறுத்துவருகிறது. இதை மாற்றி, தன்னை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அனுமதியளிக்கவேண்டும். தனக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று அவர் கடிதம் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com