மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஐ.பி.எல்: புனே அணித்தலைவர் பொறுப்பிலிருந்து தோனி நீக்கம்! 

ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் புனே அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி அதிரடியாக நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :19 பிப்ரவரி 2017, 10:14 am

DIN

புதுதில்லி: ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் புனே அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி அதிரடியாக நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் எழுந்த 'மேட்ச் பிக்சிங்' புகார்களைத் தொடர்ந்து சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. சென்னை அணிக்காக விளையாடி வந்த பெரும்பாலான வீரர்கள், கடந்த ஆண்டு புதியதாக உருவாக்கப்பட்டுள்ள புனே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை, புனே அணி நிர்வாகம் 12.5 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. அதன்படி சென்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டார். ஆனால் தோனி தலைமையிலான புனே அணி கடந்த ஆண்டு அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை.

இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ள புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்க ப் படுவதாக அணி நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. இருப்பினும் வருகின்ற தொடரில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் மட்டும் அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனிக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் வருகின்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.