பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கேப்டன் விராட் கோலி!

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் இந்திய அணி கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :6 ஜனவரி 2017, 11:02 am

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் இந்திய அணி கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டி மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக மஹேந்திர சிங் தோனி (35) புதன்கிழமை அறிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில், தோனி இந்த அதிரடி முடிவை எடுத்தார். இதையடுத்து இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமை வகித்து வரும் விராட் கோலி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பையும் ஏற்பார் என இன்று நடைபெற்ற தேர்வுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்திய அணி (ஒருநாள் போட்டிகளுக்கு): 

விராட் கோலி (கேப்டன்) தோனி (விக்கெட் கீப்பர்), ராகுல், ஷிகர் தவண், மனிஷ் பாண்டே, கெதர் ஜாதவ், யுவ்ராஜ் சிங், ரஹானே, பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, மிஸ்ரா, பூம்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்

இந்திய அணி (டி20 போட்டிகளுக்கு):

விராட் கோலி (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), மன்தீப் சிங், ராகுல், யுவ்ராஜ் சிங், ரெய்னா, ரிஷப், பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, சஹால், மனிஷ் பாண்டே, பூம்ரா, புவனேஸ்வர் குமார், நெஹ்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.