மனைவியைக் கட்டித் தழுவி முத்தமிட்டு வெற்றியைக் கொண்டாடிய ஃபெடரர்! (வீடியோ)

கோப்பையைப் பெற்றபிறகு மனைவி மிர்காவைச் சந்தித்த ஃபெடரர் அவரைக் கட்டித்தழுவி...
மனைவியைக் கட்டித் தழுவி முத்தமிட்டு வெற்றியைக் கொண்டாடிய ஃபெடரர்! (வீடியோ)
Updated on
1 min read

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார் ஃபெடரர்.

20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வீரரான ஃபெடரர், இன்றளவிலும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை 3 மணி, 37 நிமிடங்கள் நடைபெற்ற இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை தோற்கடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் 5-ஆவது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் ஃபெடரர். ஏறக்குறைய நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன்னர் 2012-இல் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஃபெடரர் பட்டம் வென்றிருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல முடியாமல் தவித்து வந்த ஃபெடரர், முழங்கால் காயத்திலிருந்து மீண்டு வந்த கையோடு ஆஸ்திரேலிய ஓபனில் வாகை சூடியிருக்கிறார். இதன்மூலம் தனது சகாப்தம் முடிந்துவிடவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். கோப்பையைப் பெற்றபிறகு மனைவி மிர்காவைச் சந்தித்த ஃபெடரர் அவரைக் கட்டித்தழுவி, முத்தமிட்டு வெற்றியைக் கொண்டாடினார். இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com