கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நான்கரை மாத கர்ப்பத்துடன் விம்பிள்டனில் விளையாடி வரும் வீராங்கனை!

செரீனா வில்லியம்ஸ் போல மேண்டி மின்னலாவும் கர்ப்பக் காலத்தில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில்...

News image
Updated On :5 ஜூலை 2017, 11:09 am

எழில்

லக்ஸம்பர்க்கைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மேண்டி மின்னல்லா, நான்கரை மாதக் கர்ப்பத்துடன் விம்பிள்டனில் விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளார்.

இத்தாலியைச் சேர்ந்த ஃபிரான்செஸா, மேண்டியை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் தோற்கடித்து விம்பிள்டன் போட்டியை விட்டு அவரை வெளியேற்றினார். ஒற்றையர் பிரிவில் வெளியேறினாலும் மேண்டி மகளிர் இரட்டையர் பிரிவிலும் விளையாடவுள்ளார்.

இதுபற்றி 31 வயது மேண்டி கூறியதாவது: இந்த சீசனில் நான் விளையாடும் கடைசிப் போட்டி இது. இவ்வருடக் கடைசியில் எனக்குக் குழந்தை பிறக்கப்போகிறது என்றார். தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், தன் கணவருடனான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் மேண்டியின் வயிற்றை அவருடைய கணவர் முத்தமிடுவதுபோன்று புகைப்படம் அமைந்துள்ளது.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார் செரீனா வில்லியம்ஸ். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது 3 மாத கர்ப்பக் காலத்தில் இருந்துள்ளார். அந்த நிலையிலும் துணிச்சலுடன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியனாகவும் ஆகியுள்ளார். அதேபோல மேண்டி மின்னலாவும் கர்ப்பக் காலத்தில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்று கவனம் ஈர்த்துள்ளார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.