ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி: தூத்துக்குடி அணிக்கு ஒரு மாதம் தடை

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில் நடப்புச் சாம்பியனான தூத்துக்குடியின் 'டியூட்டி பேட்ரியாட்ஸ்'

News image
Updated On :18 ஜூலை 2017, 8:30 pm

DIN

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில் நடப்புச் சாம்பியனான தூத்துக்குடியின் 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணி விளையாட ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கியில் பெற்ற கடன் நிலுவைத் தொகையை திரும்பச் செலுத்தக் கோரிய வழக்கில், இந்த உத்தரவை தூத்துக்குடி நீதிமன்றம் பிறப்பித்தது.
தூத்துக்குடி ஸ்போர்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் (பி) லிமிடட் என்ற நிறுவனத்தின் இயக்குநர் ஆல்பர்ட் முரளிதரன். இவர், டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் டியூட்டி பேட்ரியாட்ஸ் என்ற அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் உள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அணி ஏலத்தின்போது, டியூட்டி பேட்ரியாட்ஸ் அணியை வாங்கிய ஆல்பர்ட் முரளிதரன், இதுதொடர்பாக இந்தியன் வங்கியுடன் ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்து ரூ. 5.21 கோடி கடன் பெற்றிருந்தாராம். ஓராண்டுக்குள் பணத்தை திரும்பச் செலுத்துவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது வரை ரூ. 2.69 கோடி செலுத்தவில்லையாம். இதுதொடர்பாக ஆல்பர்ட் முரளிதரன் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில், இந்தியன் வங்கியினர் ஒப்பந்தப்படி பணத்தைச் செலுத்துமாறு தெரிவித்துவிட்டனராம். ஆனால், பணத்தை திரும்பச் செலுத்தாத நிலையில், இதுகுறித்து இந்தியன் வங்கியின் தூத்துக்குடி கடற்கரைச் சாலை கிளை மேலாளர், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்தியன் வங்கி சார்பில் வழக்குரைஞர் செங்குட்டுவன் வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசேகர், தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் டியூட்டி பேட்ரியாட்ஸ் அணி வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதிவரை விளையாடத் தடை விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். கடந்த முறை இந்த கிரிக்கெட் போட்டித் தொடரில் தூத்துக்குடி அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டுக்கான டின்பிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.