டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: பர்மிங்காமில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! 

லண்டன் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பர்மிங்காமில் இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் ஓட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2017, 7:52 am

DIN

பர்மிங்காம்: லண்டன் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பர்மிங்காமில் இந்திய கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் ஓட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அதில் இன்றைய போட்டியில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ளன. 

இந்நிலையில் லண்டனில் நேற்று லண்டன் பிரிட்ஜ் மற்றும் பரோ மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட  பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பயங்கரவாத தாக்குதல்கள்  நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து  இன்று நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் விளையாட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் பர்மிங்காம் நகரில் இந்திய அணி தங்கியிருக்கும் ஓட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.