ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்த மைதானத்தில் இன்றைக்காவது ஜெயிக்குமா ஆஸ்திரேலியா?

இங்கு விளையாடிய கடைசி 8 ஆட்டங்களில் ஒரு வெற்றி கூட கிடைக்காததால்...

News image
Updated On :10 ஜூன் 2017, 10:25 am

எக்பாஸ்டனில் இன்று நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

இங்கிலாந்து அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கோ இது வாழ்வா, சாவா ஆட்டமாகும். அந்த அணி விளையாடிய முதல் இரு ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டன. எனவே இங்கிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறது ஆஸ்திரேலியா. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்நிலையில் எக்பாஸ்டன் மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு ராசியில்லாத ஒரு மைதானமாக உள்ளது. இதனால் முக்கியமான இந்தப் போட்டியில் அந்த அணி புதிய மாற்றத்தை உருவாக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எக்பாஸ்டனில் ஆஸ்திரேலியா கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில் ஒன்றில்கூட ஜெயிக்கவில்லை. மழையால் பல ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை. சில தோல்விகளும் பெற்றுள்ளது. இங்கு விளையாடிய கடைசி 8 ஆட்டங்களில் ஒரு வெற்றி கூட கிடைக்காததால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஒருவித கலக்கத்தில் உள்ளார்கள்.

எக்பாஸ்டனில் கடைசி 8 போட்டிகளில் ஆஸ்திரேலியா

1999 - ஆட்டம் டை 
2004 - தோல்வி
2005 - முடிவு இல்லை
2012 - ஆட்டம் ரத்து 
2013 - தோல்வி, முடிவு இல்லை, முடிவு இல்லை
2017 - முடிவு இல்லை

இன்று?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.