பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சாம்பியன்ஸ் டிராபி: தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் அரை சதம்!

வங்கதேச வீரர்கள் தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் அரை சதம் எடுத்துள்ளார்கள்.

News image
Updated On :15 ஜூன் 2017, 12:25 pm

எழில்

இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் வங்கதேச வீரர்கள் தமிம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் அரை சதம் எடுத்துள்ளார்கள். 

எக்பாஸ்டனில் இன்று நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் வங்கதேச அணி கடினமான பிரிவில் இடம்பெற்றிருந்தபோதிலும், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதுதவிர பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியையும் தோற்கடித்துள்ளது. கணிக்க முடியாத வகையில் விளையாடி வரும் அந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. வங்கதேசம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுமானால், அது அந்த அணிக்கு மிகப்பெரிய வரலாறாக அமையும்.

டாஸ் வென்ற அணி இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தொடக்க முதல் அதிரடியாக ஆட விரும்பினார்கள் வங்கதேச வீரர்கள். இதனால் முதல் 10 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. செளம்ய சர்க்கார், சபீர் ரஹ்மானின் விக்கெட்டுகளை புவனேஸ்வர் குமார் வீழ்த்தினார். இதன்பின்னர் தமிம் இக்பாலும் முஷ்பிகுர் ரஹிமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கோலியின் திட்டங்களை அழகாகக் கையாண்டார்கள். இதனால் ரன்கள் வேகமாகக் கிடைத்தன. தமிம் இக்பால் 62 பந்துகளிலும் முஷ்பிகுர் ரஹிம் 61 பந்துகளிலும் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். 

இதனிடையே ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் கெதர் ஜாதவ். தனது 2-வது ஓவரில் தமிம் இக்பாலை 70 ரன்களில் க்ளீன் போல்ட் செய்தார் ஜாதவ். இதன்பின்னர் நல்ல தொடக்கத்துடன் ஆடிவந்த ஷகிப் அல்ஹசனை 15 ரன்களில் வெளியேற்றினார் ஜடேஜா. அடுத்த ஓவரில் நன்கு ஆடிவந்த முஷ்பிகுர் ரஹிம் 61 ரன்களில் ஜாதவ் பந்துவீச்சில் வீழ்ந்தார். இதனால் 2 விக்கெட் இழப்புக்கு 154 என்கிற வலுவான நிலையில் இருந்த வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் என்கிற நிலைமைக்குச் சென்றது. இதன்பின்னர் மொஸாதீக் ஹுசைன் 15 ரன்களில் பூம்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 43 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது வங்கதேச அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.