நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆண் கிரிக்கெட் வீரரிடம் இந்தக் கேள்வியை கேட்டிருப்பீர்களா?

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு தக்கப் பதில் அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

News image
Updated On :23 ஜூன் 2017, 8:47 am

DIN

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு தக்கப் பதில் அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் நாளை தொடங்கப்படவுள்ள நிலையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்திய அணியின் கேப்டன் மித்தாலியிடம் ஒரு பத்திரிகையாளர் “உங்களுக்குப் பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்குப் பதில் அளித்த மித்தாலி “இதே கேள்வியை ஒரு ஆண் கிரிக்கெட் வீரரிடம் சென்று கேட்பீர்களா? யார் உங்களுக்குப் பிடித்த பெண் விளையாட்டு வீரர் என்று?” என்று பதில் அளித்துள்ளார். 

இந்தப் பதிலை எதிர்பாராத அனைவரும் மித்தாலியின் பதிலைக் கேட்டு அதிர்ந்து போனாலும், பெண்ணியவாதிகளின் மத்தியில் பலத்த வரவேற்பை இந்தப் பதில் பெற்றுள்ளது.

எவரும் ஒரு ஆண் விளையாட்டு வீரரிடமும் உங்களைக் கவர்ந்த பெண் விளையாட்டு வீரர் யார் என்று கேட்டதில்லைதான், ஒருவேளை அப்படிக் கேட்டிருந்தாலாவது பெண்கள் பிரிவு விளையாட்டுகளும் ஆண்கள் விளையாட்டு போட்டிகளுக்கு நிகரான கவனத்தை மக்களிடையே ஈர்த்திருக்கும்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.