இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பெங்களூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 71.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு சுருண்டது. 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 106 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் சேர்த்தது. மேத்யூ வேட் 25, மிட்செல் ஸ்டார்க் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்று ஆட்டம் தொடங்கியவுடன் சில ஓவர்கள் கழித்து ஸ்டார்க்கின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். அவர் 26 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு 121-வது ஓவரில் ஜடேஜா அடுத்தடுத்த பந்துகளில் வேட் (40), லயன் (0) ஆகியோரை வீழ்த்தினார். ஹேஸில்வுட் அடுத்தப் பந்தைச் சரியாக ஆடி ஜடேஜாவின் ஹாட்ரிக் முயற்சியைத் தடுத்தார். லயனின் விக்கெட் ஜடேஜாவின் 5-வது விக்கெட் ஆகும். இந்த இன்னிங்ஸில் மற்ற பந்துவீச்சாளர்களை விடவும் குறைவான ஓவர்கள் வீசிய ஜடேஜா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பிறகு கடைசி விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா. ஹேஸில்வுட் 1 ரன்னில் வீழ்ந்தார். ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து அந்த அணி முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியத் தரப்பில் ஜடேஜா 63 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் 2 விக்கெட்டுகள், இஷாந்த், உமேஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள்.
இதன்பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்துள்ளது. ராகுல் 20, முகுந்த் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். தற்போது இந்திய அணி 10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 49 ரன்கள் பின்தங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


