பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

குஜராத்திடம் தோற்றது மிகப்பெரிய பின்னடைவு: மேக்ஸ்வெல்

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:28 pm

DIN

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் தெரிவித்தார்.
மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது குஜராத்.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மேக்ஸ்வெல் கூறியதாவது: இந்தத் தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. எங்கள் பீல்டிங் மோசமாக அமைந்தது. கேட்சுகளை கோட்டைவிட்டதால் தோற்க நேர்ந்தது. 189 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர்தான். ஆனால் பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் மோசமாக செயல்பட்டதால் வெற்றி பெற முடியவில்லை. முக்கியமான மூன்று கேட்சுகளை நாங்கள் தவற விட்டுவிட்டோம் என்றார்.
வெற்றி குறித்துப் பேசிய குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா, 'டுவைன் ஸ்மித்தும், இஷன் கிஷானும் நல்ல அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்தனர். அதை நானும், தினேஷ் கார்த்திக்கும் சரியாக பயன்படுத்திக் கொண்டோம்' என்றார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.