ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புணேவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த ஓவரை வீசிய மிட்செல் ஜான்சன், மனோஜ் திவாரி, ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரை வீழ்த்தியதோடு, 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டி முடிந்தபிறகு ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா, சமூகவலைத்தளத்தில் தன் கணவர் குறித்து கூறியதாவது:
வாழ்த்துகள். உங்கள் ஐபிஎல் அணி இன்னொரு ஐபிஎல் கோப்பையை வென்றதற்காக அல்ல, கடந்த 6 மாத கடினமான காலகட்டத்தில் நீங்கள் பட்ட வேதனைகளை நான் அறிவேன். அதிலிருந்து மீண்டு வந்து முன்பை விடவும் உறுதியாக நின்று வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துகள்.
நான் அறிந்த மனவலிமை உடைய வீரர் நீங்கள்தான். உங்களை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


