சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டம்: 189 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில், நியூசிலாந்து அணியை இந்தியா 189 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது.


லண்டன்: லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில், நியூசிலாந்து அணியை இந்தியா 189 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 1-ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் தற்பொழுது அதற்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி மார்ட்டின் கப்தில், ரோஞ்சி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கப்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 8 ரன்னிலும், ப்ரூம் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் மொகமது ஷமி வீழ்த்தினார்.
விக்கெட்டுகள் விழுந்த போதிலும் மறுமுனையில் ரோஞ்சி அதிரடியாக விளையாடினார். இதனால் முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் குவித்தது. ரோஞ்சி 66 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் க்ளீன் போல்டானார். இதற்குப் பிறகு நியூசிலாந்து அணியின் ரன்விகிதம் குறைய ஆரம்பித்தது.
அதற்கடுத்து விளையாட வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் நியூசிலாந்து 38.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. நீசம் மட்டும் இறுதி வரை போராடி 46 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் மொகமது ஷமி தான் வீசிய 8 ஓவர்கள் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் , உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் தலா 1 விக்கெ வீழ்த்தினர்.
தற்பொழுது 90 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...