சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா: தினேஷ் கார்த்திக் 94, பாண்டியா 80

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் 240 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது இந்தியா.

News image

பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார் தினேஷ் கார்த்திக்.

Updated On :30 மே 2017, 7:57 pm

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் 240 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது இந்தியா.
இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக் 77 பந்துகளில் 94 ரன்களும், ஹார்திக் பாண்டியா 54 பந்துகளில் 80 ரன்களும் குவித்தனர்.
லண்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணியில் ரோஹித் சர்மா 1 ரன்னில் வெளியேற, பின்னர் வந்த அஜிங்க்ய ரஹானே 11 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
இதையடுத்து ஷிகர் தவனுடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக். அசத்தலாக ஆடிய இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவன் 67 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு வந்த கேதார் ஜாதவ் 31 ரன்களில் ஆட்டமிழக்க, தினேஷ் கார்த்திக் 77 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் சேர்த்து ரிட்டையர்ட் அவுட் (மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில்) முறையில் வெளியேறினார்.
இதன்பிறகு களம்புகுந்த ஹார்திக் பாண்டியா வெளுத்து வாங்கினார். அவர் ஒரு புறம் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட, மறுமுனையில் ரவீந்திர ஜடேஜா 32, அஸ்வின் 5 ரன்களில் வெளியேறினர். இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது இந்தியா.
ஹார்திக் பாண்டியா 54 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 80, புவனேஸ்வர் குமார் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்கதேசம் தரப்பில் ரூபெல் ஹுசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வங்கதேசம் தோல்வி: பின்னர் ஆடிய வங்கதேச அணியில் செளம்ய சர்க்கார் 2 ரன்களில் வெளியேற, சரிவு ஆரம்பமானது. சபீர் ரஹ்மான் 0, இம்ருள் கயெஸ் 7, ஷகிப் அல்ஹசன் 7, மகமதுல்லா 0, மொஸாதீக் ஹுசைன் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 7.3 ஓவர்களில் 22 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேசம்.
பின்னர் வந்தவர்களில் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 13, மெஹதி ஹசன் மிராஸ் 24, சன்ஸாமுல் இஸ்லாம் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, 23.5 ஓவர்களில் 84 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்.
இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 5 ஓவர்களில் 13 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 5 ஓவர்களில் 16 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.