செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

தில்லி டி20 போட்டி: இந்திய அணியில் நெஹ்ரா இடம்பிடிப்பாரா?

ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் ஃபேர்வெல் ஆஷிஷ் நெஹ்ரா என்கிற வாசகங்கள் கொண்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன...

News image
Updated On :1 நவம்பர் 2017, 5:40 am

எழில்

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தில்லியில் இன்று நடைபெறுகிறது.

இது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் இந்தியாவின் மூத்த பந்துவீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இது கடைசி ஆட்டமாகும். இந்த ஆட்டத்தை அவருக்கான பிரியாவிடை ஆட்டமாக வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணியில் நெஹ்ரா இடம்பிடிப்பார் எனத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் சூழலைப் பார்க்கும்போது நெஹ்ராவுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் அணியில் புவனேஸ்வர், பூம்ரா ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே இடம்பெறமுடியும் என்கிற சூழலும் ஏற்பட்டுள்ளது.. 

ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் ஃபேர்வெல் ஆஷிஷ் நெஹ்ரா என்கிற வாசகங்கள் கொண்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. தன்னுடைய கடைசிப் போட்டி என்பதால் தன்னுடைய குடும்பத்தினர், நண்பர்களுக்காக கார்ப்பரேட் பாக்ஸ் பகுதி முழுக்க தனக்காக ஒதுக்குமாறு நெஹ்ரா வேண்டியுள்ளார். இதற்கு தில்லி கிரிக்கெட் சங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது. 

டி20 வரலாற்றை கணக்கில் கொண்டால், கடந்த ஆண்டில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டங்களில் இந்தியா தோல்வி கண்டுள்ளது. எனவே வெற்றிக்கணக்கைத் தொடங்க இந்திய அணி மிகுந்த ஆர்வத்தில் உள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.