செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ரஞ்சி போட்டியில் கர்நாடக வீரர் மயங்க் அகர்வால் முச்சதம்!

ரஞ்சி போட்டி ஆரம்பித்த சில வாரங்களுக்குள் மூன்று வீரர்கள் முச்சதம் அடித்துவிட்டார்கள்...

News image
Updated On :3 நவம்பர் 2017, 10:21 am

எழில்

இந்த வருட ரஞ்சி போட்டியில் பேட்ஸ்மேன்கள் அதிகக் கவனத்துக்கு ஆளாகியுள்ளார்கள். 

ரஞ்சி போட்டி ஆரம்பித்த சில வாரங்களுக்குள் மூன்று வீரர்கள் முச்சதம் அடித்துவிட்டார்கள். ஹிமாசல பிரதேசத்தின் பிரசாந்த் சோப்ரா, ஆந்திராவின் ஹனுமா விஹாரி ஆகியோருக்குப் பிறகு தற்போது கர்நாடகாவைச் சேர்ந்த 26 வயது மயங்க் அகர்வால் முச்சதம் எடுத்துள்ளார். 

மஹாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் 490 பந்துகளில் 4 சிக்ஸர், 30 பவுண்ட்ரிகளுடன் முச்சதம் எடுத்துள்ளார் அகர்வால். கர்நாடகா அணி 5 விக்கெட் இழப்புக்கு 628 ரன்கள் எடுத்துள்ளது. 304 ரன்களுடன் அகர்வால் ஆட்டமிழக்காமல் இழந்தார். கர்நாடக அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மஹாராஷ்டிரா முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்துள்ளது.  

ரஞ்சி போட்டியில் கர்நாடகா சார்பில் இதற்கு முன்பு கேஎல் ராகுல், கருண் நாயர் ஆகியோர் முச்சதம் எடுத்துள்ளார். இவர்களுடன் அகர்வாலும் இணைந்துள்ளார். 

இந்திய முதல்தர கிரிக்கெட்டின் 50-வது முச்சதம் இது. ரஞ்சி போட்டியில் 43-வது முச்சதம். 2007-07-க்குப் பிறகு இந்திய முதல்தர கிரிக்கெட்டில் 28 முச்சதங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.