இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பணியாற்றவுள்ள முதல் பெண் நடுவர்!

ஆஸ்திரேலிய உள்ளூர் போட்டியில் நடுவராகப் பணியாற்றவுள்ள முதல் பெண் நடுவர்...

News image
Updated On :6 அக்டோபர் 2017, 12:00 pm

எழில்

ஆஸ்திரேலிய உள்ளூர் போட்டியில் நடுவராகப் பணியாற்றவுள்ள முதல் பெண் நடுவர் என்கிற பெருமையை கிளேர் போலோசேக் பெறவுள்ளார். 

ஞாயிறு அன்று நியூ சவுத் வேல்ஸ் - கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் என ஆண்கள் அணிகளுக்கு இடையே நடைபெறும் உள்ளூர் போட்டிக்கு நடுவராகப் பணியாற்ற 29 வயது கிளேர் போலோசேக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து,  ஆண்களின் முதல் தர கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றவுள்ள நான்காவது பெண் என்கிற பெருமையை அவர் அடையவுள்ளார்.

இதற்கு முன்பு, கேத்தி கிராஸ் (நியூசிலாந்து), ஜேகுலின் வில்லியம்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), சூ ரெட்ஃபர்ன் (இங்கிலாந்து) என மூன்று பெண்கள் ஆண்களின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.