தாஷ்கண்ட் சேலஞ்சர்: இறுதிச் சுற்றில் யூகி-சரண் ஜோடி

தாஷ்கண்ட் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-திவிஜ் சரண் ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Updated on
1 min read

தாஷ்கண்ட் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-திவிஜ் சரண் ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் யூகி-
சரண் ஜோடி தங்களின் அரையிறுதியில் 3-6, 7-5, 10-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கார்ஸியா லோபஸ்-என்ரிக் லோபஸ் ஜோடியைத் தோற்கடித்தது. இந்த சீசனில் இரண்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் திவிஜ் சரண். முன்னதாக பிரான்ஸில் நடைபெற்ற போர்டியாக்ஸ் சேலஞ்சர் போட்டியில் பூரவ் ராஜாவுடன் சேர்ந்து பட்டம் வென்றார் சரண்.
அதேநேரத்தில் யூகி பாம்ப்ரி இந்த சீசனில் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு 
முன்னேறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com