6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோனியை அணியிலிருந்து நீக்கி தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு தருக: முன்னாள் வீரர் கருத்து!

தினேஷ் கார்த்திக்கால் முதல் பந்திதிலிருந்தே அடித்தாட முடியும். எனவே அவருக்கு இந்திய அணியில் ஓர் இடம் வழங்க...

News image
Updated On :14 அக்டோபர் 2017, 9:17 am

எழில்

தோனியை அணியிலிருந்து நீக்கி தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று முன்னாள் வீரர் அகர்கர் ஆலோசனை கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டி20 போட்டியில் இந்திய அணியின் தேர்வு குறித்து க்ரிக் இன்ஃபோ இணையத்தளத்தில் தனது கருத்துகளை வழங்கினார் முன்னாள் வீரர் அகர்கர். அப்போது, இந்திய அணியில் தோனியை நீக்கிவிட்டு தினேஷ் கார்த்திக்கைச் சேர்க்கவேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். அவர் மேலும் கூறியதாவது:

2-வது போட்டியில் தோனி சரியாக ஆடாததால் இதைக் கூறவில்லை. தோனியின் இப்போதைய நிலையை விடவும் தினேஷ் கார்த்திக்கால் முதல் பந்திதிலிருந்தே அடித்தாட முடியும். எனவே அவருக்கு இந்திய அணியில் ஓர் இடம் வழங்கப்பட வேண்டும். சிறந்த 11 வீரர்களையே அணிக்குத் தேர்வு செய்யவேண்டும். விராட் கோலி, தோனியை அணியிலிருந்து நீக்கமாட்டார் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் தோனிக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக்கைத் தேர்வு செய்தால் அது 3-வது போட்டிக்கான சிறந்த இந்திய அணியாக இருக்கும். தினேஷ் கார்த்திக் டி20யில் சிறந்த வீரர். அவரைத் தேர்வு செய்து ஒரு நல்ல வாய்ப்பை வழங்கவேண்டும் என்கிற சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார்.

எனினும், ஹைதராபாத்தில் நடைபெறுவதாக இருந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டி20 ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.