தொடர்ச்சியாக 5 சிக்ஸர்கள்; 35 பந்துகளில் சதம்! டேவிட் மில்லர் உலக சாதனை! (வீடியோ)
18-வது ஓவர் தொடங்கும்போது மில்லர் அரை சதம் கூட எடுத்திருக்கவில்லை. அடுத்த 3 ஓவர்களில்...


வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய வங்கதேசம் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தெ.ஆ. அணியில் ஆம்லா 70 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். ஆனால் 5-வதாகக் களமிறங்கிய மில்லர், முதலில் 23 பந்துகளில் அரை சதம் எடுத்தார். அதன்பின்னர் தொடர்ச்சியாக சிக்ஸர் மழை பொழிந்து 35 பந்துகளில் சதமெடுத்து உலக சாதனை புரிந்தார். யாருமே எதிர்பாராத திருப்பம் இது.
இதற்கு முன்பு மற்றொரு தெ.ஆ. வீரர் லெவி 45 பந்துகளில் சதமெடுத்தது சாதனையாக இருந்தது. அதைப் பத்து பந்துகள் இடைவெளியில் முறியடித்துள்ளார் மில்லர். அதிவேக டி20 சதங்களில் முதல் மூன்று இடங்களை தெ.ஆ. வீரர்கள் இடம்பெற்றுள்ளார். முதலிரண்டு இடங்களில் மில்லரும் லெவியும் உள்ளார்கள். டுபிளெஸ்ஸிஸ் 46 பந்துகளில் சதமெடுத்து 3-ம் இடத்திலும் இந்தியாவின் ராகுல் 46 பந்துகளில் சதமெடுத்து நான்காம் இடத்திலும் உள்ளார்கள்.
இதற்கு முன்பு அதிவேக சதமெடுத்தவர்கள் அனைவரும் 4-ம் நிலைக்கு முன்பு களமிறங்கியவர்கள். 5-வதாகக் களமிறங்கி சர்வதேச டி20 போட்டியில் சதமெடுத்த ஒரே வீரர், மில்லர்.
ஆனால் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் மில்லரின் சாதனைக்கு 3-ம் இடம்தான். புணே அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 30 பந்துகளில் கெயில் சதமெடுத்ததுதான் அதிவேக சதமாக உள்ளது. இதன்பின்னர் ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ், 2004-ல் உள்ளூர் போட்டியொன்றில் 34 பந்துகளில் சதமெடுத்து 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தச் சதத்தின் சிறப்பம்சமே வேகப்பந்து வீச்சாளர் முகமது சைஃபுதின் வீசிய 19-வது ஓவரில் முதல் ஐந்து பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டினார் மில்லர். ஆனாலும் கடைசிப் பந்தில் அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்கமுடிந்தது. 18-வது ஓவர் தொடங்கும்போது மில்லர் அரை சதம் கூட எடுத்திருக்கவில்லை. அடுத்த 3 ஓவர்களில், 20-வது ஓவரின் முடிவில் 101 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.
வங்கதேசம் வீரர்களால் இதை மட்டும் தாங்கவே முடியாது. ரன் எதுவும் எடுக்காத நிலையில் வங்கதேச விக்கெட் கீப்பர், மில்லர் அளித்த கேட்ச்சைத் தவறவிட்டார்! அதில் தப்பிப் பிழைத்த மில்லர், மறக்கமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...