செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

கேப்டன் பதவி பறிபோனதோடு ரஞ்சி அணியிலிருந்தும் நீக்கப்பட்ட இர்ஃபான் பதான்!

கேப்டன் பதவி பறிபோனது மட்டுமல்லாமல் அணியிலிருந்தும் நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில்...

News image
Updated On :31 அக்டோபர் 2017, 12:14 pm

எழில்

பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பரோடா ரஞ்சி அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

33 வயது பதான், இந்த வருடம் ஆந்திரா, மத்திய பிரதேச அணிகளுக்கு எதிராக விளையாடினார். மொத்தம் 2 விக்கெட்டுகளும் 88 ரன்களும் எடுத்தார். குரூப் சி பிரிவில் உள்ள பரோடா, 2 போட்டிகளில் ஒன்றில் தோற்று ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்தப் பிரிவில் உள்ள மத்திய பிரதேசம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 7 புள்ளிகளுடன் தமிழகம் 3-ம் இடத்தில்
உள்ளது. 

அணியின் மோசமான நிலைமை இர்ஃபான் பதானின் கேப்டன் பதவியைப் பறித்துள்ளது. மேலும், திரிபுராவுக்கு எதிரான அடுத்தப் போட்டியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கேப்டன் பதவி பறிபோனது மட்டுமல்லாமல் அணியிலிருந்தும் நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. பதானுக்குப் பதிலாக, தீபக் ஹுடா பரோடா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.