இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள்!

ஐபிஎல்-லில் கலக்கிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரஹில் ஷா ஆகிய இருவரும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால்...

News image
Updated On :8 செப்டம்பர் 2017, 6:52 am

எழில்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 17-ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17-ம் தேதி பகலிரவாக நடைபெறுகிறது.

அதற்கு முன்பு செப்டம்பர் 12 அன்று ஆஸ்திரேலிய அணி சென்னையில் பயிற்சி ஆட்டம் ஒன்றில் பங்கேற்கிறது. பிசிசிஐ தலைவர் அணியுடன் மோதுகிறது. 

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவர் அணியில் இரு தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ஐபிஎல்-லில் கலக்கிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரஹில் ஷா ஆகிய இருவரும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். மேலும் அணியின் பயிற்சியாளராக முன்னாள் தமிழக வீரர் ஹேமங் பதானி அறிவிக்கப்பட்டுள்ளார். 

பிசிசிஐ தலைவர் அணி: ராகுல் திரிபாதி, மயங்க் அகர்வால், ஷிவம் செளத்ரி, நிதிஷ் ராணா, கோவிந்தா பொடார், குல்கீரத் மன் (கேப்டன்), ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, அக்‌ஷய் கர்ணேஸ்வர், குல்வந்த் கெஜ்ரோலியா, குஷங் படேல், அவேஷ் கான், சந்தீப் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ரஹில் ஷா. பயிற்சியாளர்: ஹேமங் பதானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.