டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ், சமி சேர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் விளையாட உள்ள 16 பேர் கொண்ட இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:51 pm

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் விளையாட உள்ள 16 பேர் கொண்ட இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதன்படி, இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடிய இந்திய அணியில் சிறிய அளவிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், முகமது சமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக, இலங்கைக்கு எதிரான தொடரில் அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், அந்தத் தொடரில் இடம்பெற்றிருந்த ஷர்துல் தாக்குர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. அவர், நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய "ஏ' அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இந்த அணியில் சேர்க்கப்படவில்லை. இதில் அஸ்வின் இங்கிலாந்தில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கச் சென்றுள்ளார். அதில் வோர்செஸ்டர்ஷைர் அணியில் விளையாடும் அஸ்வினுக்கு இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன.
இதுதொடர்பாக, இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறுகையில், "சுழற்சி முறையில் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் கொள்கையின் அடிப்படையில், அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய யுவேந்திர சாஹல், அக்ஸர் படேல் ஆகியோர் தங்களது திறமையை தொடர்ந்து நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.
அணி விபரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அஜிங்க்ய ரஹானே, தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.