டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சென்னையில் நாளை நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டம்! தீவிர பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி!

சென்னையில் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கிறது. வாரிய தலைவர் அணியுடன் மோதுகிறது...

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:51 pm

எழில்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், வரும் 17-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதையொட்டி, ஆஸ்திரேலிய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதற்கு முன்பு சென்னையில் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கிறது. வாரிய தலைவர் அணியுடன் மோதுகிறது. வாரிய தலைவர் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், ரஹில் ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 13 வரை நடைபெறவுள்ளது. ஒரு நாள் போட்டிகள் சென்னை, கொல்கத்தா, இந்தூர், பெங்களூர், நாகபுரி ஆகிய நகரங்களிலும், டி20 போட்டிகள் ராஞ்சி, குவாஹாட்டி, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளன.

வாரிய தலைவர் அணி: ராகுல் திரிபாதி, மயங்க் அகர்வால், ஷிவம் செளத்ரி, நிதிஷ் ராணா, கோவிந்தா பொடார், குல்கீரத் மன் (கேப்டன்), ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, அக்‌ஷய் கர்ணேஸ்வர், குல்வந்த் கெஜ்ரோலியா, குஷங் படேல், அவேஷ் கான், சந்தீப் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ரஹில் ஷா. பயிற்சியாளர்: ஹேமங் பதானி.

ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஆஷ்டன் அகர், ஹில்டன் கார்ட்ரைட், நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் ஃபாக்னர், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட்,ஆடம் ஸம்பா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.