6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பர ஒப்பந்தத்தை மறுத்த விராட் கோலி: ஏன் தெரியுமா? 

பல கோடி ரூபாய் மதிப்புள்ள குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி மறுத்துள்ள விவகாரம் தற்பொழுது தெரிய வந்துள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2017, 11:14 am

DIN

மும்பை: பல கோடி ரூபாய் மதிப்புள்ள குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி மறுத்துள்ள விவகாரம் தற்பொழுது தெரிய வந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக இருப்பவர் விராட் கோலி. பல்வேறு விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் அதிக வருமானம் ஈட்டி வருகிறார். ஆனால் தற்பொழுது பல கோடி ரூபாய் மதிப்புள்ள குளிர்பான விளம்பர ஒப்பந்த ஒப்பந்தம் ஒன்றை அவர் மறுத்துள்ள விவகாரம் தற்பொழுது தெரிய வந்துள்ளது.

தனிப்பட்ட முறையில் பொதுவாக காற்றடைக்கப்பட்ட எந்த ஒரு குளிர் பானத்தையும் தான் அருந்துவதில்லை. எனவே தான் அருந்தாத ஒன்றை மற்றவர்களுக்கு விளம்பரம் செய்ய விரும்பவில்லை என்ற காரணத்தினால் இந்த வாய்ப்பை மருத்துள்ளதாக நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி தெரிவித்தார்.

முன்னதாக அவரே ஒருமுறை நிருபர் ஒருவரிடம் கூறும்போது, 'என்னால் செய்ய முடியாத ஒன்றை பிற அணி வீரர்களிடம் வலியுறுத்த மாட்டேன்; முதலில் ஒன்றை நான் செய்ய முடியும் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பிறகே சகவீரர்களை அதைச் செய்யுமாறு கூறுவேன்' என்று  தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.