இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாண்டியாவுக்கு எதிரான திட்டங்களை சரியாக பிரயோகிக்கவில்லை: ஸம்பா

இந்திய ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு எதிராக தனது திட்டங்களை சரியாக பிரயோகிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா கூறினார்.

News image
Updated On :19 செப்டம்பர் 2017, 7:12 pm

DIN

இந்திய ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு எதிராக தனது திட்டங்களை சரியாக பிரயோகிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. அப்போது இணைந்த ஹார்திக் பாண்டியா-தோனி ஜோடி, அணியை மீட்டெடுத்து ஸ்கோரை உயர்த்தியது.
அப்போது, சுழற்பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் ஒரே நம்பிக்கையான ஆடம் ஸம்பாவின் ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினார் பாண்டியா.
இந்நிலையில், 2-ஆவது ஒருநாள் ஆட்டத்துக்கு கொல்கத்தாவில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆடம் ஸம்பா அதுகுறித்து கூறியதாவது:
நெருக்கடியான சூழ்நிலைகளிலும் நான் நன்றாகவே பந்துவீசுவேன். ஆனால், எனது பந்துவீச்சு திட்டங்களை ஹார்திக் பாண்டியாவுக்கு எதிராக சரியான முறையில் பிரயோகிக்கத் தவறிவிட்டேன். நான் வீசிய 3 ஃபுல்டாஸ் பந்துகளையுமே அவர் சிக்ஸர் அடித்தார். ஹார்திக் பாண்டியா போன்ற ஒரு நல்ல வீரருக்கு எதிராக தவறிழைக்கும் பட்சத்தில், அவரை ஆட்டமிழக்கச் செய்வதற்கான வாய்ப்புகள் விலகிச் சென்றுவிடும்.
இந்தியா போன்ற துணை கண்டங்களில் விளையாடும்போது, பந்துவீச்சில் நீளம் என்பது முக்கியமான ஒன்று. ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது பந்துவீச்சின் நீளத்தில் சிறிய தவறு செய்தாலும், மைதானத்தின் அளவு காரணமாக அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் இந்தியாவில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். 
இந்த சூழ்நிலையில் இருந்து சில விஷயங்களை கற்றுள்ளேன். அடுத்த ஆட்டங்களில் பாண்டியாவை விரைவாகவே வீழ்த்துவேன் என்று நம்புகிறேன் என்று ஆடம் ஸம்பா கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.