இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கொல்கத்தா ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங்!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது... 

News image
Updated On :21 செப்டம்பர் 2017, 7:37 am

எழில்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இந்தத் தொடரை வெற்றிகரமாக தொடங்கியிருக்கும் இந்திய அணி, வெற்றியைத் தொடரும் முனைப்பில் 2-வது ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளது.

கடந்த சில தினங்களாக கொல்கத்தாவில் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு நாள்களாக இரு அணி வீரர்களும் பயிற்சி பெறுவது பாதிக்கப்பட்டது. வியாழக்கிழமையும் கொல்கத்தாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. எனினும் இன்று காலை முதல் மழை பெய்யவில்லை என்பதால் காலதாமதம் எதுவுமின்றி 2-வது ஒருநாள் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய அதே இந்திய அணி இந்தப் போட்டியிலும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஃபாக்னர், ஸாம்பாவுக்குப் பதிலாக ரிச்சர்ட்சன், அகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.