6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொல்கத்தா ஒருநாள் போட்டி: கோலி, ரஹானே அரை சதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், கோலி-ரஹானே ஆகிய இருவரும் கவனமாக விளையாடி...

News image
Updated On :21 செப்டம்பர் 2017, 9:52 am

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், கோலி-ரஹானே ஆகிய இருவரும் கவனமாக விளையாடி அரை சதமெடுத்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளார்கள்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இந்தத் தொடரை வெற்றிகரமாக தொடங்கியிருக்கும் இந்திய அணி, வெற்றியைத் தொடரும் முனைப்பில் 2-வது ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளது.

கடந்த சில தினங்களாக கொல்கத்தாவில் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு நாள்களாக இரு அணி வீரர்களும் பயிற்சி பெறுவது பாதிக்கப்பட்டது. வியாழக்கிழமையும் கொல்கத்தாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. எனினும் இன்று காலை முதல் மழை பெய்யவில்லை என்பதால் காலதாமதம் எதுவுமின்றி 2-வது ஒருநாள் போட்டி ஆரம்பமானது. 

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய அதே இந்திய அணி இந்தப் போட்டியிலும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஃபாக்னர், ஸாம்பாவுக்குப் பதிலாக ரிச்சர்ட்சன், அகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

ஈடன் கார்டன்ஸில் மீண்டும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா ஆறாவது ஓவரிலேயே எதிர்பாராதவிதத்தில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்தது. அடுத்த விக்கெட் உடனே விழக்கூடாது என்பதால் ரஹானே, கோலி ஆகிய இருவரும் கவனமாக விளையாடினார்கள். இருவரும் 51 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இந்திய அணி 19.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. ரஹானே 62 பந்துகளிலும் கோலி 60 பந்துகளிலும் அரை சதத்தை எட்டினார்கள். பிறகு ரஹானே 55 ரன்களில் எதிர்பாராத விதத்தில் ரன் அவுட் ஆனார். 

இந்திய அணி 24-வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.