6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேப்டன் கோலியின் சாதனைகள்: வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்!

இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 8 ஒருநாள் போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார் கோலி...

News image
Updated On :22 செப்டம்பர் 2017, 8:45 am

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 8-வது வெற்றியைப் பெற்றுள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி 107 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 6.1 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

33-வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், 2-ஆவது பந்தில் மேத்யூ வேட் (2), 3-ஆவது பந்தில் ஆஷ்டன் அகர் (0), 4-ஆவது பந்தில் பேட் கம்மின்ஸ் (0) ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 8 ஒருநாள் போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார் கோலி. இதையடுத்து அவர் நிகழ்த்திய சாதனைகள்:

8+ தொடர்ச்சியான வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்கள்

கோலி - 3 முறை (2013-14; 2014-17; 2017*)
கங்குலி, தோனி, டிராவிட் - 1 முறை.

* ரிக்கி பாண்டிங் 8 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகளை நான்கு முறை நிகழ்த்தியுள்ளார். கோலி மூன்று முறை நிகழ்த்தியுள்ளார்.

37 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு அதிக வெற்றி கண்ட கேப்டன்கள் 

30 -  ரிக்கி பாண்டிங் 
29 - கிளைவ் லாயிட்/ரிச்சர்ட்ஸ்/கோலி 
28 - மைக்கேல் கிளார்க் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.