ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

இந்தியாவின் முதல் தங்க மங்கை மீராபாய் சானு

காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதலில் முதல் தங்கப்பதக்கம் வென்றதின் மூலம் தங்க மங்கை ஆனார் மீராபாய் சானு.

Updated On :6 ஏப்ரல் 2018, 12:58 am IST

காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதலில் முதல் தங்கப்பதக்கம் வென்றதின் மூலம் தங்க மங்கை ஆனார் மீராபாய் சானு.
மணிப்பூர் மாநிலம் பளுதூக்குதல், குத்துச்சண்டை, கால்பந்து விளையாட்டு புகழ் பெற்றதாக திகழ்கிறது. பளு தூக்குதலில் குஞ்சுராணி தேவி உலக சாம்பியன் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக மணிப்பூர் இம்பால் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மீராபாய் சானுவும் பளுதூக்குதலில் தற்போதையை நிலையை அடைய போராட வேண்டியிருந்தது. 
முன்னாள் வீராங்கனை குஞ்சுராணியிடம் பயிற்சி பெறும் மீராபாய் சானு, கடந்த 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த 2017 நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சாம்பியன் பட்டம் வென்றார். 
கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் தகுதி பெற்றாலும் தோல்வியை தழுவினார். இதற்கிடையே தற்போது கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பெண்கள் 48 கிலோ எடைப்பிரிவில் 196 கிலோ தூக்கி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
ஏற்கெனவே அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது. தற்போதைய வெற்றிக்காக மணிப்பூர் அரசும் ரூ.20 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மீராபாய் சானு கூறியதாவது:
நான் போட்டியில் பங்கேற்க வந்தபோது சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கில் வரவில்லை. ஆனால் இங்கு வந்த பின்னர் தான் நிச்சயம் புதிய சாதனை படைக்க வேண்டும் எனத் தோன்றியது. இதற்காக நான் கடுமையான பயிற்சி மேற்கொண்டேன். இது காமன்வெல்த் போட்டிகளில் இரண்டாவது பதக்கமாகும் என்றார்.
வெள்ளி வீரர் குருராஜா: காமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் ஆடவர் 56 கிலோ பிரிவில் 249 கிலோ எடை தூக்கி பி.குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 
கர்நாடக மாநிலம் குந்தாப்பூரைச் சேர்ந்த குருராஜா முதன்முறையாக காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 
25 வயது நிறைந்த குருராஜா போட்டியின் முதல் இருமுறை முயற்சியில் தோல்வியை தழுவினார். இதையடுத்து அவரது பயிற்சியாளர் ராஜேந்திர பிரசாத், உனது குடும்ப சூழ்நிலையை நினைத்து செயல்படு என அறிவுறுத்தினார். இதையடுத்து எனது குடும்பம், நாட்டை மனதில் வைத்து எடையை தூக்கினேன். வெள்ளியை வென்றேன் என குருராஜா தெரிவித்தார்.
இந்திய விமானப்படையில் பணிபுரிந்து வரும் குருராஜா கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பளு தூக்கும் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். டிரக் லாரி டிரைவரான தனது தந்தை 8 குழந்தைகளை வளர்க்க கடும் பாடுபட்டதை நினைத்து, குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருவேன் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.