டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காமன்வெல்த் போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணிக்கு மேலும் ஒரு தங்கம்!

காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான டபுள் டிராப் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்றுள்ளார். 

News image
Updated On :11 ஏப்ரல் 2018, 5:26 am

எழில்

காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான டபுள் டிராப் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்றுள்ளார். 

கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர். பதக்கப் பட்டியலில் ஏற்கெனவே இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் போட்டியின் 7-வது நாளான இன்று, துப்பாக்கி சுடுதலில் இந்திய அணிக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் ஸ்ரேயாஸி சிங் தங்கம் வென்று அசத்தினார். இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றுள்ள 12-வது தங்கமாகும். இதையடுத்து, இந்திய அணி தொடர்ந்து பதக்கப்பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.